பிக் பாஸ் புகழ் வனிதா தனது சிறுவயதில் அம்மா மஞ்சுளாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் தனது முதல் பிறந்த நாள் அன்று எடுத்து கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படத்தில் வனிதாவை மறைந்த பிரபல நடிகர் சிவாஜி கணேசன் கையில் ஏந்தியபடி இருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
வனிதா பல போராட்டங்களை வாழ்வில் சந்தித்த பின்னர் ஒரு தனி பெண்ணாக வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்.
தற்போது பிசியாக நடித்து கொண்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் புதிதாக யூடுயூப் சேனல் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார். பல்வேறு பெண்களுக்கு ஒரு முன் உதாரணமாக இவர் இருக்கிறார்.
இதேவேளை, இப்படி வனிதா ஒரு வலிமையான பெண்ணாக இருந்து வந்தாலும் தனது குடும்பத்தை பிரிந்திருப்பது குறித்து பலமுறை வருத்தப்பட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.