மொபைல் வலையமைப்பின் ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பமான 5G கடந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தமை தெரிந்ததே.
எனினும் குறிப்பிட்ட சில நாடுகளில் மாத்திரமே மக்களின் பாவனைக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது வரை உலகளவில் சுமார் 17.73 மில்லியன் மக்கள் 5G தொலைபேசி வலையமைப்பினைப் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இதற்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்டு பாவனையில் இருக்கும் 4G வலையமைப்பினை உலகெங்கிலும் சுமார் 5.27 பில்லியன் வரையானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர் எனவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
5G வலையமைப்பானது 4G வலையமைப்பினை விடவும் பல மடங்கு வேகம் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.