கொரோன வைரஸ் பரவாமல் இருப்பதற்காக ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் மக்களை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
இதனால் பாடசாலை மாணவர்களும் வீட்டில் இருப்பதுடன் அவர்களது கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு பல்வேறு வழிமுறைகள் உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஆசிரியர்கள் வாட்ஸ் ஆப் குழுக்கள் உருவாக்க அதில் மாணவர்களின் பெற்றோர்களின் வாட்ஸ் ஆப் இலக்கங்களை சேர்த்து விடுமுறைகால பயிற்சிகளை வழங்கிவருகின்றனர்.
எனினும் இது பாதுகாப்பு அற்றதாக அனேகமான பெற்றோர்கள் கருதுகின்றனர்.
காரணம் மொபைல் இலக்கங்களை மாணவர்கள் தவாறாகப் பயன்படுத்துவதற்குரிய சாத்தியங்கள் இருக்கின்றமையாகும்.
எனவே இதனை தவிர்ப்பதற்கு Whatsapp Broadcast வசதியினை ஆசிரியர்கள் பயன்படுத்த முடியும்.
இதன் மூலம் சாதாரண வாட்ஸ் ஆப் குழு போன்றே பலருக்கு தகவல்களை பரிமாற்றக்கூடியதாக இருக்கின்றபோதிலும் அக் குழுவில் உள்ளவர்கள் ஏனையவர்களின் தொலைபேசி இலக்கங்களை பார்வையிட முடியாது. எனவே இது பாதுகாப்பானதாகும்.
இவ் வசதியினை செயற்படுத்துவதற்கு வாட்ஸ் ஆப்பில் வலது பக்க மேல் மூலையில் காணப்படும் மூன்று புள்ளிகள் இருக்கும் பகுதியை அழுத்த வேண்டும்.
தோன்றும் மெனுவில் New Broadcast என்பதை கிளிக் செய்து குழுவில் இணைக்கவேண்டிய தொலைபேசி இலக்கங்களை தெரிவு செய்து பயன்படுத்த முடியும்.