நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகமுள்ள மாவட்டங்களில் புத்தளம் மாவட்டமும் ஒன்று.
இந்நிலையில் அந்த மாவட்டத்தின் கிராமமொன்றில், மக்களே ஒன்றிணைந்து தமது கிராமத்தை தனிமைப்படுத்தியுள்ளனர்.
சாலியவெவ பொலிஸ் பிரிவிலுள்ள வீரபுர கிராம மக்களே இவ்வாறு ஒன்றிணைந்து தமது கிராமத்தை தனிமைப்படுத்தியுள்ளனர்.
கிராமத்திலிருந்து செல்லும் பிரதான வீதிகளை தடுத்து, பாதுகாப்பு தடைகளை பிரதேச மக்கள் ஏற்படுத்தியுள்ளனர்.
அத்துடன் அத்தியாவசிய தேவைகளிற்காக கிராமத்தை விட்டு வெளியில் சென்று, மீண்டும் கிராமத்திற்குள் நுழைபவர்கள் சோதனைச்சாவடியில் கைகளை கழுவி, தம்மை சுத்தப்படுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் , வெளியிலிருந்து வருபவர்கள் தடுக்கப்படுவதுடன், இரகசியமாக நுழைபவர்களை தடுக்க, ரோந்துப் பணியிலும் அப்பகுதி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.