கொரோனா வைரஸிடம் சிக்கி தவித்து வரும் இத்தாலிக்கு இலவசமாக பாதுகாப்பு கவசங்களை சீனா கொடுத்து உதவியதாக கூறப்பட்ட நிலையில், அந்த விஷயத்தில் சீனாவின் கபட நாடகம் தற்போது அம்பலமாகியுள்ளது.
கடந்த ஆண்டின் இறுதியின் சீனாவில் கொரோனா வைரஸ் பரவியது. இதை சீனா மூடி மறைத்து வந்ததால், அந்த வைரஸ் சீனாவின் வுஹான் மாகாணத்தில் வெகுவாக பரவியது.
வுஹானில் இருந்து, அந்த வைரஸ் அப்படியே உலகம் முழுவதும் பரவத் துவங்கியது.
இந்த தகவல் வெளியான சில நாட்களில் சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் பல மடங்கு அதிகரித்தது. 80,000 பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டதால், சீனா மீது இரக்கப்பட்டு பல நாடுகளும் உதவி செய்தன.
சுகாதாரத்தில் முன்னணியில் இருக்கும் இத்தாலி டன் கணக்கில் மருத்துவ பாதுகாப்பு கவசங்களை இலவசமாக அனுப்பி வைத்தது.
அப்போது இத்தாலிக்கு இந்த நோயினால் தன் நாட்டில் மக்கள் ஆயிரம், ஆயிரமாக பலியாவார்கள் என எண்ணி இருக்கவில்லை. பின்னர், சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது.
அப்போது, பல ஆயிரம் பேர் இறந்த நிலையில், மருத்துவ வசதிகள் போதாமல், மருத்துவ பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் தடுமாறி வந்த இத்தாலிக்கு உதவி செய்து நல்ல பெயர் எடுக்க சீனா மருத்துவ பாதுகாப்பு கவசங்களை அளிப்பதாக கூறியது, அதே போன்று அனுப்பியும் வைத்தது.
உலகமே சீனா சரியான சமயத்தில் பெரிய உதவி செய்து விட்டதாக நினைத்த நிலையில், அந்த நாடு குறைந்த அளவு பாதுகாப்பு கவசங்களை மட்டுமே இத்தாலிக்கு அனுப்பி இருப்பதும், அதுவும் பணம் கொடுத்து அதை வாங்கிக் கொள்ள இத்தாலியை கட்டாயப்படுத்தி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இத்தாலி இலவசமாக கொடுத்ததை, அதே இத்தாலியிடம் பணத்திற்கு விற்றுள்ளது சீனா. இது குறித்த தகவல் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நிர்வாகத்தில் இருக்கும் ஒரு அதிகாரி ஸ்பெட்டேட்டர் என்ற பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், கொரோனா வைரஸை கட்டுப்படுத்தாமல், உலகிற்கே பரவ வைத்தது சீனா தான்.
தற்போது சீனாவில் பல இடங்களில் இயல்பு நிலை இருப்பதாக சீன அரசே கூறுகிறது. ஆனால், உலகின் எந்தா நாட்டிலும் இயல்பு நிலை இல்லை. கொரோனா வைரஸை எதிர்கொள்ள முடியாமல் உலகமே தடுமாறுகிறது.
இந்த நேரத்தில் இந்த நோய் பரவியதற்கு காரணமான சீனா, நிச்சயம் மற்ற நாடுகளுக்கு உதவி செய்ய வேண்டும்.
ஆனால், இப்போதும் கூட பணத்திற்காக மருத்துவ உபகரணங்களை விற்க முயல்வதும், அதுவும் இலவசமாக கொடுத்த நாட்டிற்கே விற்க முயல்வதும், அதை வெளியே மறைத்து உதவி செய்வது போல நாடகம் ஆடுவதும் சீனாவின் ஈடு, இரக்கம் இல்லாத குணத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
மேலும், சீனா இந்த வியாபார நோக்கத்திற்காகவே கொரோனா வைரஸை பரப்பியதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கொரோனா வைரஸ் சீனாவால் உருவாக்கப்பட்ட பயோ ஆயுதமாக இருக்கலாம் என்று உலக நாடுகள் சந்தேகப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.