கேகாலை அரநாயக்க மற்றும் யாழ்ப்பாணம் மந்திகை ஆகிய பகுதிகளில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந் நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக குறித்த நபர்கள் உயிரிழந்து இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
அரநாயக்க பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞன் திடீரென உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் உள்ள வாகன திருத்தல் நிலையம் ஒன்றில் பணிபுரிந்த அந்த இளைஞன் வீட்டில் இருந்த நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார்.
சடலம் தற்போது கேகாலை வைத்தியாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அரநாயக்க பகுதி முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்
இதேவேளை, யாழ்ப்பாணம் மந்திகை பகுதியில் கொரோனா வைரஸினால் பீடித்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நபர் ஒருவர் இன்று அதிகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.