பொன்னாலை J/170 சமுர்த்தி அலுவலகத்தில் இன்று காலை 8.30 மணிதொடக்கம் சமுர்த்தி பயனாளிகள் தவம் கிடந்தனர்.
தங்களை வருமாறு கூறிய சமுர்த்தி உத்தியோகத்தர் 11.00 மணிவரை வரவில்லை என மக்கள் கூறுகின்றனர்.
ஏனைய இடங்களில் வீடுகளுக்கு சென்று சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்படுகின்ற நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இவர் அலுவலகத்தி்ற்கு மக்களை அழைத்து கொடுப்பனவை வழங்கியிருக்கி்றார்.
மக்கள் குழுமியிருப்பது தொடர்பாக சமுர்த்தி உத்தியோகத்தரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது பொறுப்பற்ற விதத்தில் பதிலளித்தார்.
அலுவலகத்திற்கு வந்து மக்களுக்கு விடயத்தைக் கூறி அவர்களை வீடுகளுக்கு அனுப்புங்கள். மக்கள் முகக்கவசங்கள் கூட இல்லாமல் நிற்கிறார்கள் என கூறிபோது பொறுப்பற்ற விதத்தில் பதிலளித்துவிட்டு அழைப்பை துண்டித்தார்.
இது குறித்து அறிந்துகொண்ட பொதுச் சுகாதார பரிசோதகர் அந்த இடத்திற்கு வருகைதந்து மக்களை வீடுகளுக்கு அனுப்பினார்.
இப்பிரதேச மக்களுக்கு சமுர்த்தி இடர்கடன் {10000} இதுவரை முழுமையாக வழங்கப்படாததுடன் பொருள் விநியோகம் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை.
இதேவேளை, குறித்த உத்தியோகத்தர் வழமையாகவே தங்களுடன் முரண்பட்டு வருகின்றார் என்று மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.