கொழும்பு கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று காலை தளத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் பிற்பகல் 2 மணி முதல் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் தளத்தப்படுவது 9ஆம் திகதி காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மீள் அறிவிப்பு வரை தொடர்கிறது.
அத்துடன் அத்தியாவசிய சேவைகளை தவிர்ந்த வேறு விடயங்களுக்காக மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம் அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ளும் தரப்பினர் பயன்படுத்த வேண்டிய முறைகளை துஷ்பிரயோகம் செய்வோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.