ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் தகனம் செய்வது தொடர்பில் ஷார்ஜாவின் ஆட்சியாளர் கடந்த ஏப்ரல் மாதம் 03ஆம் திகதி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இந்த அறிக்கை தொடர்பில் இலங்கை சிங்கள இணையத்தள ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட செய்தி குறித்து கொழும்பில் உள்ள தூதரகம் கவலை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்வது தொடர்பாக, உச்ச சபை உறுப்பினரும் ஷார்ஜாவின் ஆட்சியாளருமான Sultan bin Muhammad Al-Qasimi சஜாவில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் எவரையும் அடக்கம் செய்ய வேண்டாம் என்று ஷார்ஜாவில் உள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இடமின்மை, மற்றும் அவை மற்றொரு குறிப்பிட்ட பகுதியில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.
இறந்த நபரின் உடல் கண்ணியத்துடன் நடத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம், மரணத்திற்கான காரணம் எதுவாக இருந்தாலும், பாரபட்சம் அல்லது பாகுபாடு இல்லாமல், பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை தகனம் செய்ய வேண்டும் என்றே கூறப்பட்டது..
இந்த செய்தியை சிங்கள் ஊடகங்கள், தீங்கிழைக்கும் வகையில் விளக்கியுள்ளதென்பது அதிர்ச்சியளிக்கிறது.
இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக இனவெறி மற்றும் வெறுப்பைத் தூண்டும் வகையில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.
வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியை தூதரகம் கடுமையாக கண்டிக்கிறது, மேலும் அனைத்து வலைத்தளங்களிலிருந்தும் தவறாக சித்தரித்து கூறப்பட்ட செய்திகளை உடனடியாக அகற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், தகுந்த விளக்கத்தை வெளியிடுவதன் மூலம் தவறான தகவல்களை சரிசெய்யவும் இலங்கையில் தொடர்புடைய அதிகாரிகளை கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.