அமெரிக்காவில் பல்பொருள் அங்காடி ஒன்றில் உணவுப்பொருட்கள் மீது இருமவும் எச்சில் துப்பவும் செய்துள்ளார் ஒருவர்.
அமெரிக்காவில் மட்டும் 360,000 பேருக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தி 10,000க்கும் அதிகமானோரின் உயிரைப் பறித்தும் விட்டது கொரோனா.
இப்படிப்பட்ட ஒரு சூழலில் மக்கள் பார்க்க, உணவுப்பொருட்கள் மீது எச்சில் துப்பி, இருமவும் செய்துள்ளார் 65 வயதுடைய ஒருவர்.
ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்ட கடை ஊழியர் ஒருவரை அடிக்க கையை ஓங்கியிருக்கிறார் அவர்.
உடனே அவரது முகத்தில் ஒரு குத்துவிட்டிருக்கிறார் அந்த கடை ஊழியர். அதற்குள் உதவிக்கு வந்த மற்ற வாடிக்கையாளர்கள் அந்த நபரை பிடித்து கீழே தள்ளி, அவரைப் பிடித்து வைத்திருக்கிறார்கள்.
பின்னர் பொலிசார் வந்து அந்த நபரைப் பிடித்து, அவருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா இல்லையா என்பதை அறிவதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.