உலகவாழ் மக்கள் பாரிய சுகாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள நிலையில், நாட்டையும், மக்களையும் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் அனைத்து சுகாதார சேவையாளர்களும் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
கொரோனா வைரஸ் தாக்கம் முழு உலகத்துக்கும் பாரிய சவால் விடுத்துள்ளது. இவ்வாறான நிலையில் நாட்டு மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு தங்களின் பாதுகாப்பை பொருட்படுத்தாமல் 24 மணித்தியாலமும் சேவையாற்றும் சுகாதார சேவையாளர்களுக்கு இலங்கை வாழ் மக்கள் அனைவரும் கடன்பட்டுள்ளோம் என்றார்.
மேலும், கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு எதிராக போராடும் உலகவாழ் சுகாதார சேவையாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், அவர்களின் சேவையினை முன்னெடுக்க முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதுடன், மன தைரியமும் அவர்களுக்கு கிடைக்க வேண்டும். என பிரார்த்திக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.