ஒன்பதே நாட்களில் கிழக்கு லண்டன் எக்செல்லில் பிரம்மாண்ட கொரோனா சிறப்பு என்.எச்.எஸ் நைட்டிங்கேல் மருத்துவமனை கட்டப்பட்டுள்ள து.
இந்நிலையில் கட்டிமுடிக்கப்பட்ட புதிய மருத்துவமனைக்கு முதல் கொரோனா வைரஸ் நோயாளி நேற்று இரவு அங்கு அனுமதிகபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கிழக்கு லண்டனில் இருக்கும் எக்செல் எனப்படும் கண்காட்சி அரங்கம்மே இவ்வாறு தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.
குறித்த மருத்துவமனையில் 4000 படுக்கை வசதிகள் கொண்ட நைட்டிங்கேல் மருத்துவமனை ஒன்பதே நாட்களில் கட்டப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படைகள், சுகாதாரத்துறை பணியாளர்கள் ஆகியோரின் உதவியோடு இந்த மருத்துவமனை மின்னல் வேகத்தில் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.