பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா காரணமாக மூன்றாவது நாளாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
போரிஸ் ஜான்சன் கடந்த மார்ச் 26ம் திகதி கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டார்.
கொரோனா பாதித்து 10 நாட்கள் கழித்து போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா அறிகுறிகள் கொஞ்சம் தீவிரம் அடைந்தது.
இதையடுத்து லண்டலில் இருக்கும் செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் மூன்று நாட்களாக தொடர்ந்து ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார்
இந்த நிலையில் பிரிட்டிஷ் அரசு நிர்வாகத்தை கவனித்து வரும் இந்தியா வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுணக்தான் கருத்து தெரிவிக்கையில்,.
“போரிஸ் ஜான்சனின் உடல்நிலை வேகமாக முன்னேறி வருகிறது. அவருக்கு செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் தீவிரமான சிகிச்சை அளித்து வருகிறோம். அவருக்கு தீவிர சிகிச்சை தொடர வேண்டும் என்று கூறியுள்ளனர். பிரதமர் போரிஸ் ஜான்சன் எனக்கு நல்ல நண்பர், என்னுடைய பாஸ், என்னுடன் வேலை பார்க்கும் நபர். அவருக்காக நான் இந்த பணிகளை செய்து வருகிறேன். அவர் விரைவில் திரும்பி வருவார் என்று நம்புகிறேன்.
மருத்துவர்கள் கொடுத்த சிகிச்சைக்கு அவர் உடல் சரியாக பதில் அளிக்கிறது. மோசமான உடல்நிலையில் இருந்து கொஞ்சம் முன்னேற்றம் அடைந்துள்ளார்.
அவரால் பேச முடிகிறது. அவரால் கட்டிலில் எழுந்து உட்கார முடிகிறது. அவரை மருத்துவர்கள் தீவிரமாக 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
அவருக்கு செயற்கையாக ஆக்சிஜன் அளிக்கப்படவில்லை” என்று ரிஷி சுணக் கூறியுள்ளார்.