இந்தியா முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனாவை தடுக்க ஊரடங்கு சட்டம் போடப்பட்டுள்ளது.
ஆடி ஓடி விளையாடிக் கொண்டிருந்த அனைவரும் வேறுவழியே இல்லாமல் வீட்டில் மூழ்கிக் கிடக்கின்றனர்.
இது மிகப் பெரும் அபாயம் என்பதை உணர்ந்த பெற்றோர்கள் பழந்தமிழர் விளையாட்டுகளில் குழந்தைகளை ஈடுபடுத்தி வருகின்றனர்.
பொதுவாக வீடுகளுக்குள் இருந்து விளையாடக் கூடிய விளையாட்டுகளான தாயம், சொட்டாங்கல் அல்லது பாண்டி கல், பல்லாங்குழி போன்றவைகளை கொரோனா உயிர்ப்பித்துக் கொடுத்திருக்கிறது.
அதுவும் தாயம் விளையாட்டுதான் திருபிய திசையெங்கும். பிரபல தொகுப்பாளினி கூட கிராமத்தில் இருந்து அண்மையில் தாயம் விளையாடும் காணொளியை இணையத்தில் வெளியிட்டிருந்தார்.
https://www.facebook.com/watch/?t=30&v=548803225752057