முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி நிறுவனமான சாம்சுங் சுமார் 2,000 ஸ்மார்ட் கைப்பேசிகளை வைத்தியசாலைகளுக்கு நன்கொடையாக வழங்கவுள்ளது.
அதாவது பிரித்தானியாவில் உள்ள NHS Nightingale வைத்தியசாலைகளுக்கே இந்த நன்கொடை வழங்கப்படவுள்ளது.
குறித்த வைத்தியசாலைகள் COVID-19 நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக புதிய தற்காலிக மருத்துவமனைகளை கட்டமைப்பதுடன், மேலதிக மருத்துவ வசதிகளையும் உருவாக்கி வருகின்றனர்.
இவர்களுக்கு உதவும் முகமாகவே சாம்சுங் நிறுவனம் குறித்த கைப்பேசிகளை வழங்கவுள்ளது.
அதுமாத்திரமன்றி தொற்றுநீக்கக்கூடிய UV இயந்திரங்கள் உட்பட மேலும் சில இலத்திரனியல் உபகரணங்களை வழங்க சாம்சுங் நிறுவனம் முன்வந்துள்ளது.