எதிர்வரும் நாட்களில் ஐரோப்பிய ரீதியில் கொரோனா வைரசின் மையப்புள்ளியாக பிரித்தானியா மாறும் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்துள்ள நிலையில் உலகளாவிய கொரோனா மரணங்கள் 89000 ஐ தாண்டியுள்ளன.
ஐரோப்பிய ரீதியில் பிரித்தானியாவில் தற்போது அதிகளவு கொரோனா உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டு வருவதால் எதிர்வரும் நாட்களில் ஐரோப்பிய ரீதியில் கொரோனா வைரசின் மையப்புள்ளியாக பிரித்தானியா மாறக்கூடுமென்ற அச்சநிலை நிலவி வருகின்றது.
உலகளாவிய பெரும்தொற்றாக மாறியுள்ள கொரோனா வைரஸ் தொற்று முதலாவது அதன் மையப்புள்ளியாக இருந்த சீனாவில் தணிந்தது. அதன் பின்னர் இரண்டாவதாக உருவாகிய இத்தாலிய மையப்புள்ளியும் தற்போது தணிவடைந்தாலும் புதிய புதிய தீவிர மையப்புள்ளிகளும் உருவாகி வருகின்றன.
ஜப்பானைப் பொறுத்தவரை கொரோனா வைரஸ் பரவல் இனங்காணப்பட்ட நாளில் இருந்து நேற்று அதிக பாதிப்பு பதிவாகியுள்ளது.
நேற்று மட்டும் புதிதாக 500 பேருக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அதேவேளை இதுவரை கொரோனா வைரஸால் 15இ200 க்குமே;பட்ட மரணங்களை பதிவுசெய்த ஸ்பெனியில் தற்;போது புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
ஆயினும் தினசரி மரணங்களின் தொகை கடந்த 2 நாடகளால 700 க்கு குறையவில்லை.
எனினும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் நடைமுறைப்படுத்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலையை ஏப்ரலுக்கு பின்னர் நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இத்தாலியிலும் இந்த மாத இறுதியில் தேசிய முடக்க நிலை தளர்த்தப்படலாமென அதன் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பரிந்துரைசெய்தால், இந்த மாத இறுதியில் கட்டுப்பாடுகளை தளர்த்த தொடங்கவுள்ளதாககூறிய அவர் இத்தாலியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் வீதம் மெதுவாக குறைந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
பிரித்தானியாவை பொறுத்தவரை நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச உயிரிழப்புகள் பதிவாகின இத்தாலியில் ஒரேநாளில் பதிவாகிய அதியுச்ச தொகையை விட பிரித்தானியாவில் நேற்று அதிக மரணங்கள் பதிவாகின.
இதனையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்தமாக ஏழாயிரத்தை கடந்தது இதன் பின்னா இன்று பகல் வெளியான இங்கிலாந்து பிராந்திய தரவுகளில் கடந்த 24 மணிநேரத்தில் 765 பேர் பலியான விபரங்கள் இருந்ததால் இன்றை மரணங்களும் ஏறக்குறைய நேற்றைய தொகையளவிலேயெ பதிவாகியுள்ளது.
பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இன்று ஐந்தாம் நாளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் ஏற்படும் மருத்துவ ரீதியான சவால்களுக்கு மத்தியில் இதன் தாக்கத்தால் ஏற்படும் பொருளாதார நெருக்கடி உலகில் சுமார் அரை பில்லியன் மக்களை ஏழ்மை நிலைக்குள் தள்ளிவருவதாக அஞ்சப்படுகிறது.
சுமார் 50 கோடி மக்கள் அன்றாட உணவுக்கு வழியில்லாத ஏழ்மை நிலைக்கு தள்ளப்படும் அபாயநிலை தோன்றியுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் நியூயோர்க்கில் நேற்று ஒரே நாளில் 779 பேர் உயிரிழந்ததையடுத்து உயிரிழந்வர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தேசியக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ க்யூமோ உத்தரவிட்டுள்ளார்.