மூதூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மூதூர் வர்த்தக சங்கத்தலைவரின் வேண்டுகோளுக்கு இணங்க கட்டைப்பறிச்சான் 223 படைப்பிரிவு இராணுவத்தினரால் 90 குடும்பங்களுக்கான பொதி செய்யப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் இன்று விநியோகிக்கப்பட்டன.
அரபா நகர், ஆலிம்சேனை, ஜின்னா நகர், ஆனைச்சேனை, அக்கரைச்சேனை, நொக்ஸ் ரோட் நடுத்தீவு, இக்பால் நகர், பெரியபாலம், போன்ற பிரதேசங்களில் மக்களுக்கான பொதி செய்யப்பட்ட பொருட்களை வீடு வீடாகச் சென்று இலங்கை இராணுவத்தினர் நிவாரணங்களை வழங்கியிருந்தனர்.
அத்துடன் ஜனாஸா நலன்புரிச் சங்கத்திற்கு ஒரு தொகை பொதி செய்யப்பட்ட பொருள்களும் ஜனாஸா நலன்புரிச் சங்கத் தலைவரிடம் இதன் போது கையளிக்கப்பட்டது.





















