கொரோனா வைரசினை தடுப்பதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை முன்கூட்டியே நீக்குவது குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.
உலக நாடுகள் கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து அவதானமாகயிருக்கவேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனம் தடைகள் தளர்ததப்படுவதை விரும்புகின்றது ஆனால் கட்டுப்பாடுகளை முற்றாக விலக்கிக்கொள்வதனால் ஆபத்தான விளைவுகள் ஏற்படும் என அந்த அமைப்பின் பணிப்பாளர் நாயகம் எச்சரித்துள்ளார்.
இத்தாலி பிரான்ஸ் ஸ்பெயின் ஜேர்மனியில் சாதகமான அறிகுறிகள் தென்படுகின்றன என குறிப்பிட்டுள்ள அவர் ஆனால் 16 ஆபிரிக்க நாடுகள் உட்பட பல நாடுகளில் அச்சம் தரும் அதிகரிப்புகள் காணப்படுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.