கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளர்களைக் கண்டறிவதற்கான இலங்கைக்கு 20,000க்கும் அதிகமான பரிசோதனை உபகரணங்களை சீனா வழங்கியுள்ளது.
இது குறித்து சீனத் தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
அந்தப் பதிவில்,
சீனாவின் பாரிய வணிகக் குழுமமான ‘ஜக்மா’வினால் இலங்கைக்கு 20,064 பரிசோதனை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை நேற்று இரவு இலங்கையை வந்தடைந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிவதற்கான இந்தப் பரிசோதனை உபகரணங்களின் பெறுமதி 130, 000 அமெரிக்க டொலர்கள் என்றும் சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது.