கிளிநொச்சி தர்மபுரம் கல்லாறு பகுதியில் 3512 போத்தல் கோடா மற்றும் 71 போத்தல் கசிப்புடனும் இருவர் தர்மபுரம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபருக்கு கிடைத்த தகவலை அடுத்து போதைப் பொருள் சட்டவிரோத செயற்பாடுகளுக்கான விசேட பொலிஸ் குழுவினர் நேற்று மாலை கல்லாறு கிராமத்தில் குறித்த பகுதியினை சுற்றிவளைத்துள்ளனர்.
இதன் போது சம்பவம் தொடர்பில் இருவரை கைது செய்துள்ளதோடு, சட்டவிரோத பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.
ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள போது சந்தேகநபர்கள் மிகவும் இரகசியமான முறையில் கசிப்பு உற்பத்தியை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இதேவேளை கிளிநொச்சி நகரை அண்டிய பகுதியில் நேற்றையதினம் விற்பனைக்காக கசிப்பு சிறிய சொப்பின் பைகளில் பொதி செய்யப்பட்டுக்கொண்டிருந்த போது சிலர் பொலீஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.