கொரோனா வைரஸை ஒழிக்க அரசாங்கம் எடுத்துவரும் அனைத்து நடவடிக்கைகளையும் வரவேற்பதாக முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பி முன்னாள் சபாநாயகர் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி செயற்பாடுகளை ஒத்திவைத்து கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுக்கும் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் எனவும் கரு ஜயசூரிய தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளை வழங்கும் போது சுகாதார துறையினரும், பாதுகாப்பு பிரிவினரும் செயற்படும் விதம் தொடர்பில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர்களின் சேவையை பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.ச்