வாடகை வீட்டில் வசித்து வந்த சீரியல் நடிகை மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கு சின்னத்திரை நடிகை சாந்தி என்கிற விஸ்வசாந்தி. சீரியலில் நடிப்பது மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்துள்ளார்.
ஹைதராபாத் எல்லாரெட்டிகுடா என்ற பகுதியில் உள்ள காலனியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். சில நாட்களாக அவரது வீடு திறக்கப்படாமலேயே இருந்ததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து எஸ்.ஆர்.நகர் பொலிசிற்கு தகவல் தெரிவித்தனர்.
விஸ்வசாந்தியின் வீட்டுக்கு வந்த பொலிசார் கதவை உடைத்துச் சென்று பார்த்த போது வீட்டுக்குள் சாந்தி மர்மமான முறையில் இறந்துகிடந்தார். பின்னர் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
விஸ்வசாந்தியின் செல்போனைக் கைப்பற்றிய பொலிசார் வீட்டின் எதிரே இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் விஸ்வசாந்தி அறையில் மதுபாட்டிலும், ஸ்நாக்ஸும் இருந்துள்ளது, மேலும் அறையில் இறந்துகிடந்த அவரது நிலை, கால்கள் கட்டிலிலும் தலை கீழேயும் காணப்பட்டுள்ளது. இதனால் போதையில் தடுமாறி கட்டிலிருந்து கீழே விழுந்ததில் மண்டையில் அடிபட்டு இறந்துள்ளாரா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.