கொரோனா வைரஸ் தொற்றினால் வெள்ளை இனத்தவரை விடவும் கறுப்பு, ஆசிய மற்றும் சிறுபான்மை இன மக்களே அதிகம் பாதிக்கப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய மருத்துவமனைகளில் கொரோனா நோய்த் தொற்றுடன் அனுமதிக்கப்பட்டுள்ள மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் ஊடாக இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 2,000 நோயாளிகளில் 35% பேர் வெள்ளையர் அல்லாதவர்கள் என தெரியவந்துள்ளதென குறிப்பிடப்படுகின்றது.
இது இங்கிலாந்து மக்கள் தொகையில் 13% விகிதத்தை குறிப்பதாக தீவிர சிகிச்சை தேசிய தணிக்கை பிரிவு மற்றும் ஆராய்ச்சி மையம் அதைக் கண்டறிந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 14 சதவீதம் பேர் ஆசியர்கள் மற்றும் அதே விகிதம் கறுப்பர்கள் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நமக்கு கிடைத்த தகவல்களின்படியும் பிரித்தானியாவில் பல ஈழத்தமிழர்கள் உட்பட இலங்கையர் பலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் சிலர் மட்டுமே வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாகவும் சிலர் வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளன.
ஆனாலும் பலர் கொரோனா தொற்று இருப்பதையே மறைக்கின்றமையும் தெரியவந்துள்ளன.