மட்டக்களப்பு சத்துர்க்கொண்டானை சேர்ந்த முன்னாள் போராளியான சிவநாதன் அருந்ததி உயிரிழந்துள்ளார்.
கடற்கரை வீதி சத்துருக்கொன்டானை சொந்த முகவரியாக கொன்ட இவர் கடந்த 03.02.1999. அன்று மாங்குளம் பகுதியில் ஏற்பட்ட மோதலின் போது ஷெல் வீச்சு காரணமாக விழுப்புண் அடைந்தார்.
நீண்ட காலமாக முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட நிலையில் தனது வாழ்க்கையினை சக்கர நாற்காலியுடனே வாழ்ந்து வந்தவர்.
இவருடைய கணவரும் ஒரு முன்னாள் போராளி என்பதும் அவரும் ஒரு மாற்று திறனாளி எனவும் சொல்லப்படுகின்றது.
அத்துடன் இவர்களுக்கு ஒரு பெண் பிள்ளையும் உண்டு.
இந்நிலையில் இவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளமை அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.


















