பொலனறுவ நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கத்தியை காட்டி பணத்தை கொள்ளையடித்த கும்பலை பொலிசார் தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் இன்று(13) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
3 பேர் கொண்ட கும்பலே இந்த திருட்டில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த மூவர் அடங்கிய கொள்ளை கும்பலை பொலிசார் தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.