உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொடர்பில் போலி செய்திகளை முகப்புத்தகத்தில் வெளியிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 214 ஐ எட்டியுள்ளது. இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் முகப்புத்தகங்களில் போலி தகவல்கள் பல பரப்பப்படுவது தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் முகப்புத்தகத்தில் கொரோனா தொற்று தொடர்பாக போலி செய்திகளை பரப்பிய ஏழு பேர் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, இதுவரையில் குறித்த குற்றச்சாட்டின் கீழ் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




















