கர்ப்பிணி பெண்ணை பாலியியல் பலாத்காரம் செய்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவில், பீகார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டத்தில் கர்ப்பிணி பெண் வயிற்று வலியின் காரணமாக, மகத் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார்.
இந்த நிலையில், இவர் இரண்டு நாட்களுக்கு பின்னர் கரோனா வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், மார்ச் முதல் வாரத்தின் போது இல்லத்திற்கு மீண்டும் திரும்பியுள்ளார். இல்லத்திற்கு திரும்பிய மூன்று நாட்களில் அந்த பெண் திடீரென உயிரிழந்துள்ளார்.
இதனால், இந்த விஷயம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணின் குடும்ப உறுப்பினர் மற்றும் மருத்துவமனை ஊழியர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.
மேலும், கொரோனா வார்டில் பெண் இருந்த சமயத்தில் இரண்டு முறை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததில், பெண்ணிற்கு இரத்தப்போக்கு அதிகரித்து, குழந்தையின் நிலையும் மோசமடைந்துள்ளது.
பெண்ணின் உடல்நிலை மேலும் மோசமந்தால், மருத்துவ ஊழியரின் போலியான தகவலால் பெண்ணை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்தி மேலும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.