பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அஞ்சனா தனியார்தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர்.
இவர் கயல் படத்தின் கதாநாயகனான சந்திரனை திருமணம் செய்துகொண்டு ஒரு ஆண் குழந்தைக்கும் தாயாகினார். இந்நிலையில் கொரொனா வைரஸால் வீட்டிலிருந்த இவர் அவ்வப்போது ஏதாவது ஒரு புகைப்படம் அல்லது வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவார்.
அந்தவகையில், ஊரடங்கு உத்தரவு மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதால், அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அஞ்சனா வடிவேலுவின் காமெடியை டிக்டாக் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு உள்ளதால் அவரது கணவர் சந்திரன் இதனை இன்ஸ்டாவில் வெளியிட வைரலாகி வருகிறது.