சீன நாட்டில் பரவத்துவங்கிய கொரோனா வைரஸானது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரசால் இதுவரை 119,090 பேர் பரிதாபமாக பலியாகி வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட நபர்களை எண்ணிக்கையும் 1,917,239 ஆக அதிகரித்து உள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸின் பாதிப்புக்கொண்ட மக்களுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் கொரோனாவால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில், கொரோனா வைரஸின் தாக்கத்தால் சுமார் 52 நாடுகளில் மொத்தமாக 22 ஆயிரத்து 073 சுகாதார ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்களுக்கு கொரோனா வைரஸ் பணியாற்றும் இடத்தில் இருந்தோ அல்லது பாதிக்கப்படும் நபர்களிடம் இருந்தோ பரவியிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
மேலும், ஏற்கனவே உலக சுகாதார அமைப்பின் சார்பில் சுகாதார ஊழியர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.