பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பக்கத்தில் இந்த வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருட கொண்டாடங்கள் வழக்கத்தில் இருந்து சற்று வித்தியாசமாக இருக்கலாம், ஆனால் நாம் ஏன் தனித்திருக்கின்றோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எனவே வீட்டிலேயே இருங்கள். தேசிய சுகாதார சேவை மற்றும் உயிர்களை இந்த புத்தாண்டில் காப்பாற்றுங்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதுடன் அண்மையில் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, குணமடைந்தார்.
Happy New Year to all celebrating Puthandu.
This year's celebrations may be slightly different from usual, but we must remember why we are staying apart.
So stay home, protect the NHS and save lives this Puthandu. #StayHomeSaveLives pic.twitter.com/y1M3tLYU6h
— UK Prime Minister (@10DowningStreet) April 14, 2020