இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,463 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, 29 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்து இதுவரை எந்த ஒரு 24 மணி நேரத்திலும் இவ்வளவு பாதிப்புகள் இந்தியாவில் ஏற்பட்டதில்லை.
இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 10,815 ஆகியுள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 353 ஆகியுள்ளது.
இதுவரை தொற்று ஏற்பட்டவர்களில் 1,190 பேர் குணமடைந்துள்ளனர். இத்தகவல்களை இந்தியாவின் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
29 deaths and 1463 new cases reported in last 24 hours, the sharpest ever increase in cases. India's total number of #Coronavirus positive cases rises to 10,815 (including 9272 active cases, 1190 cured/discharged/migrated and 353 deaths): Ministry of Health and Family Welfare pic.twitter.com/cWIKnY6Aw8
— ANI (@ANI) April 14, 2020