லண்டனில் கொரோனாவால் உயிரிழக்கும் இஸ்லாமியர்களை அடக்கம் செய்ய கல்லறையில் கணிசமான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளது.
தென்கிழக்கு லண்டனில் உள்ள Kemnal Park cemeteryல் தான் புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்கள் நடைமுறைபடி உயிரிழந்த 24 மணி நேரத்தில் சடலத்தை புதைத்துவிட வேண்டும்.
அதே போல தகனம் செய்யும் பழக்கம் இஸ்லாமியர்கள் நடைமுறையில் இல்லை.
அதே நேரத்தில் தற்போது கொரோனாவால் இறக்கும் இஸ்லாமியர்களை அடக்கம் செய்ய அவர்களின் குடும்பத்தார் இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
லண்டனில் உயிரிழந்த இஸ்லாமியர்களை புதைக்க இரண்டு கல்லறைகள் உள்ளன.
இஸ்லாமிய சமூகத்தில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளைச் சமாளிக்க 10 சடலங்களை புதைக்க தேவையான புதைகுழி தற்சமயம் Kemnal Park cemeteryல் தோண்டப்பட்டுள்ளது.
Kemnal Park Cemetery grounds மேலாளர் கூறுகையில், இறப்புகள் தொடர்ந்து உயரக்கூடும் என்பதால் கல்லறையில் இஸ்லாத்திற்கு ஏற்ப விரைவாக இறுதிச் சடங்குகளை நடத்தும் வகையில் தயார் படுத்தி வருகிறோம்.
அதே போல இறுதிச்சடங்கில் அரசாங்கம் கூறியவாறு 10 பேருக்கு மேல் கலந்து கொள்ள அனுமதிப்பதில்லை என கூறியுள்ளார்.