ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் நடத்திய 24 மணிநேர சுற்றிவளைப்பில் சுமார் 1001 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊரடங்குச்சட்ட அனுமதிபத்திரமின்றி வீதிகளில் நடமாடியவர்களும் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தவர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைது செய்வதற்காக நேற்று (13) மாலை 6 மணி முதல் பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அதற்கமைய அனுமதி பத்திரமின்றி வீதியில் நடமாடுதல், மதுபானத்தை போக்குவரத்து செய்தல், தேவையற்ற விதத்தில் வீதியில் நடமாடுதல், அத்தியாவசிய பொருட்கள் என்ற விளம்பரத்தை தேவையற்ற விதத்தி;ல் பயன்படுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்காகவே குறித்த 1001 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த காலப்பகுதியில் சுமார் 215 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதேபோல் கடந்த மார்ச் 20 திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்குச்சட்டத்தை மீறிய குற்றத்திற்காக சுமார் 26,830 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 6845 வாகனங்களையும் பொலிஸார் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.