இலங்கையில் கடந்த இரண்டு நாட்களில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களிடம் எந்தவொரு நோய் அறிகளும் தென்படவில்லை என சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் பாலசூரிய தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த அவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் மூலமாகவே அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில் கொரோனா வைரஸ் தொற்றானது அறிகுறிகள் இல்லாமலும் தாக்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.