இன்று காலை மட்டக்களப்பு வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனைக் கிராமத்தில் தூக்கத்தில் இருந்த இரண்டு சிறுவர்கள் அவர்களது தந்தையினால் கிணற்றில் வீசப்பட்ட பதைபதைக்கும் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பிலான பின்னனி தற்சமயம் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த பிள்ளைகளின் தாயார் கடந்த ஐந்து வருடங்களின் முன்னர் மரணமடைந்த நிலையில் குழந்தைகள் இருவரும் கொழும்பில் உள்ள காப்பகம் ஒன்றில் வளர்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மனைவி இறந்ததன் பின்னர் பிள்ளைகளின் தந்தையார் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்ததாக அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.
நாட்டில் கொரோனா அச்சம் நிலவியதை தொடர்ந்து அவர் காப்பத்தில் இருந்து தனது பிள்ளைகளை ஊருக்கு அழைத்து வந்த்துள்ளார்.
அதன்பின்னர் அவரது உறவினர்களிடம் சென்று தம்மை யாரோ கொலை செய்ய வருவதாக அடிக்கடி கூறியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று காலையும் அதேபோலவே சென்று தனது பிள்ளைகளை கிணற்றில் வீசியதாக அவரது உறவினரிடம் தந்தையார் கூறியுள்ளார்.
எனினும் அவர் எப்பொழுதும் போல அவ்வாறு பிதற்றுவதாக எண்ணி உறவினர் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இந்த நிலையில் சிறிது நேரம் கழித்து உறங்கிகொண்டிருந்த குழந்தைளை காணவில்லை என அயலவர்களிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது.
அதன் பின்னரே சம்பவத்தின் விபரீதத்தை உணர்ந்த உறவினர் குழந்தைகள் இருந்த வீட்டிற்கு சென்றபோது குழந்தைகள் பரிதாபமாக உயிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதேவேளை எது எவ்வாறு இருப்பினும் தந்தையின் புத்தி சுவாதீனத்தால் இரு பிஞ்சு உயிர்கள் பறிபோனமை அப்பகுதியையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.