கடந்த 2009-ம் ஆண்டு உலகளவில் பாதிப்பை ஏற்படுத்திய ஸ்வைன் ஃப்ளூ வைரஸை விட 10 மடங்கு கொடியது கொரோனா வைரஸ் என உலக சுகாதார அமைப்பு (WHO) ஒத்து கொண்ட நிலையில் அது தொடர்பில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுவரை கொரோனாவின் தன்மை குறித்து வெளிப்படையான கருத்து தெரிவிக்காமல் இருந்த உலக சுகாதார அமைப்பு முதல்முறையாக துணிச்சலாக 10 மடங்கு கொடியது என்று தெரிவித்துள்ளது
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் ஜெனிவாவில் அளித்த பேட்டியில்,
கடந்த 2009-ம் ஆண்டு உலகளவில் பாதிப்பை ஏற்படுத்திய ஸ்வைன் ஃப்ளூ(H1N1) வைரஸைவிட 10 மடங்கு கொடியது, ஆபத்தானது கொரோனா வைரஸ் என்பதை உலக நாடுகளுக்கு எச்சரிக்கையாகத் தெரிவிக்கிறேன்.
கொரோனாவை மிகவும் மெதுவாகவே கட்டுப்படுத்த முடியும், குறைக்கவும் முடியும். ஆதலால்உலக நாடுகளில் உள்ள அரசுகள் தங்கள் நாடுகளில் கடைபிடிக்கும் லாக்டவுனை மிகவும் இறுக்கமாகப் பின்பற்றுங்கள்.
சில நாடுகள் கொரோனாவின் தாக்கம் குறைந்ததால் கட்டுப்பாடுகளை தளர்த்த திட்டமிட்டுள்ளன. அவர்களுக்கு நான் சொல்வதெல்லாம், கட்டுப்பாடுகளை மிகவும் மெதுவாக, படிப்படியாக தளர்த்துங்கள், இல்லாவிட்டால் கொரோனா மிகமோசமான, பேரழி தரும்வகையில் மீண்டெழும்.
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் தடுப்பூசிகளை கண்டுபிடிப்பது அவசியமானதாகும் என கூறியுள்ளார்.