யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுடன் 12 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில், அதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலாலி தனிமைப்படுத்தல் மையத்தித்தில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டவர்களில் ஒரு குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகள்கள் இருவருமே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் தற்பொழுது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது.
பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த எட்டுப் பேருக்குக்கும், முழங்காவில் கடற்படை முகாமில் தனிமைப்படுதடுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த எட்டுப்பேரில் 7 பேர் அரியாலையைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் வவுனியாவை சேர்ந்தவர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸிற்கு இதுவரை , 1,992,189 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 126,066 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.