ஹட்டன் – நோர்வூட், சென்ஜோன் டிலரி தோட்ட பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக 27 குடும்பங்களை சேர்ந்த 126 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் முழுமையாக பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களை சேரந்த 26 பேர் தற்காலிகமாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை அப்பகுதியில் பெய்த கடும் மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.