உலக சுகாதார அமைப்பிற்கு நிதியளிப்பதை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எடுத்த முடிவை மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கண்டித்துள்ளார்.
முன்னதாக கொரோனாவால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை உலக சுகாதார அமைப்பு தவறாக நிர்வகிப்பதாகவும், கொரோனா வைரஸின் பரவலை மூடிமறைப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கையாள்வது குறித்து மறுஆய்வு மேற்கொள்ளப்படும்போது, உலக சுகாதார அமைப்பிற்கு நிதியளிப்பதை நிறுத்துவதாக டிரம்ப் செவ்வாயன்று அறிவித்தார்.
இந்நிலையில், டிரம்ப்பின் இந்த முடிவுக்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அந்த வரிசையில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸும் கண்டித்துள்ளார்.
Halting funding for the World Health Organization during a world health crisis is as dangerous as it sounds. Their work is slowing the spread of COVID-19 and if that work is stopped no other organization can replace them. The world needs @WHO now more than ever.
— Bill Gates (@BillGates) April 15, 2020
உலக சுகாதார நெருக்கடியின் போது உலக சுகாதார அமைப்பிற்கு நிதியளிப்பதை நிறுத்துவது ஆபத்தானது என்று பில் கேட்ஸ் தனது அதிகாரப்பூர்வ ட்வீட்டர் கணக்கில் தெரிவித்தார்.
அவர்களின் பணி கொரோனா பரவலைக் குறைத்து வருகிறது, அந்த வேலை நிறுத்தப்பட்டால் வேறு எந்த அமைப்பும் அவற்றுக்கு மாற்றாக இருக்க முடியாது, முன்பை விட இப்போது உலகிற்கு உலக சுகாதார அமைப்பு தேவை என தெரிவித்துள்ளார்.
பில் கேட்ஸின் கேட்ஸ் அறக்கட்டளை, உலக சுகாதார அமைப்பின் மிகப்பெரிய நன்கொடையாளர்களில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.