ஜேர்மனியில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணிநேரத்தில் 285 பேர் மரணமடைந்த நிலையில் மொத்தமாக பலியானோர் எண்ணிக்கை 3000ஐ தாண்டியுள்ளது.
அதே சமயம் நாட்டில் புதிய கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதாக நாட்டின் நோய் கட்டுப்பாட்டுக்கான மையமான ராபர்ட் கோச் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
தற்போது வரை ஜேர்மனியில் கொரோனாவால் 3,254 பேர் பலியாகியுள்ளனர், உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை செவ்வாயன்று 2,486 அதிகரித்து மொத்தமாக 127,583 ஆக உயர்ந்துள்ளது, இது இன்றுவரை மிகக் குறைந்த அதிகரிப்புகளில் ஒன்றாகும்.
சுமார் 72,600 பேர் இந்த நோயிலிருந்து மீண்டுள்ளனர் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதனன்று ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல், கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த நாட்டில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் சிலவற்றை தளரத்துவது குறித்து பிராந்திய தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.
ஆஸ்திரியா மற்றும் டென்மார்க் போன்ற பல ஐரோப்பிய நாடுகள் சமீபத்தில் சில பள்ளிகளையும் சிறிய கடைகளையும் மீண்டும் திறக்க அனுமதித்தன என்பது குறிப்பிடத்தக்கது.