ஏமனில் வைரஸ் பரவுவதைத் தடுக்க கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட அனைவரையும் ஹவுத்தி தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுவிடுவார்கள் என்று ஈரானிய ஆதரவுடைய போராளிகள் அறிக்கைகளை வெளியிடும் வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ளவர்களின் நலனுக்காக கொலை செய்வதே சிறந்த முறை, எந்த சிகிச்சையும் இல்லை, தனிமைப்படுத்தலும் இல்லை, எந்தவொரு நடைமுறைகளும் செய்யப்படாது, தோட்டாக்கள் மட்டுமே போதும் என போராளி ஒருவர் கூறுகிறார்.
ஏமனில் கடந்த வெள்ளிக்கிழமை நாட்டின் தெற்கே ஹட்ராமவுட் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான முதல் வழக்கை பதிவானது.
2020 ஆம் ஆண்டில் ஏமனுக்கான ஐ.நா. மனிதாபிமான திட்டத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் 500 மில்லியன் டொலர்களை பங்களிக்கும் என்றும் சவூதி அரேபியா உறுதிப்படுத்தியது.
Watch: Houthi militants will shoot and kill anyone diagnosed with the #COVID_19 #coronavirus to stop the spread of the virus in #Yemen, according to a video showing the Iranian-backed fighters making such statements.https://t.co/HOtUshly0n pic.twitter.com/nygglX3eTn
— Al Arabiya English (@AlArabiya_Eng) April 14, 2020
கொடிய கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அரபு கூட்டணி ஏமனில் கடந்த வியாழக்கிழமை தொடங்கி இரண்டு வாரங்களுக்கு முழுமையான போர்நிறுத்தத்தை அறிவித்தது.
ஹவுத்திகள் இன்னும் போர்நிறுத்த முயற்சியை மறுபரிசீலனை செய்யவில்லை, மாகாணங்கள் போராளிகளுடன் தினசரி மோதல்கள் இடம் பெற்றுவருவதாக புகார்க்ள வந்துள்ளன.
ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் உறுப்பினர்கள் ஏமனில் அரபு கூட்டணியின் ஒருதலைப்பட்ச போர் நிறுத்தத்தை வரவேற்று, இதேபோல் பதிலளிக்க ஹவுத்தி போராளிகளுக்கு அழைப்பு விடுத்தனர்.