உலகளவில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவும் அபாய வலய நாடுகளின் பட்டியலில் இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளது.
உலகப் பிரசித்திபெற்ற போப்ஸ் சஞ்சிகை வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முறையே இத்தாலி, அமெரிக்கா, பிரித்தானியா நாடுகள் ஒன்றுமுதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
Deep Knowledge Group என்கிற சர்வதேச நிறுவனம் நடத்திய இந்த ஆய்வில் இந்த தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவுகின்ற அபாய வலய நாடுகளின் பட்டியலில் இலங்கை 16ஆவது இடத்தை வகிக்கின்றது.
அதற்கமைய கொரோனா பாதுகாப்பு நாடுகள் பட்டியலில் 40 நாடுகளும் கொரோனா ஆபத்தான நாடுகள் பட்டியலில் 20 நாடுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் இஸ்ரேல், ஜேர்மனி, தென் கொரியா, சீனா, நியூஸிலாந்து, தாய்வான் சிங்கப்பூர், ஜப்பான், ஹொங்கொங், சுவிட்ஸர்லாந்து, ஒஸ்ரியா, கனடா, ஹங்கேரி, டென்மார்க், நெதர்லாந்து, நோர்வே, UAE, பெல்ஜிங், வியட்நாம், தாய்லாந்து, பின்லாந்து, Luxembourg, குவைட், Czechia, மொனாகோ, கட்டார், Liechtenstein, சைப்ரஸ், கிரிக், Estonia, மலேசிய, போலந்து, அயர்லாந்து, Croatia, துருக்கி, ஓமான், Slovakia, Latvia, Slovenia, ஆகிய நாடுகளே பாதுகாப்பான நாடுகளாக பெயரிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் கொரோனா ஆபத்தான நாடுகளாக, இத்தாலி, அமெரிக்கா, பிரித்தானியா, ஸ்பெயின், பிரான்ஸ், சுயீடன், ஈரான், ஈக்குவாட்டர், பிலிப்பைன்ஸ், ரோமானியா, நைஜீரியா, ரஷ்யா, பங்களாதேஷ், மெக்சிகோ, இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா, மியன்மார், கம்போடியா, லோகோஸ் ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன.