நடிகை நயன்தாரா சமீபத்தில் தனது காதல்கள் பற்றி பேசும்போது நம்பிக்கை இல்லாத இடத்தில் காதல் இருக்காது.
அங்கிருந்து அது வெளியேறிவிடும். நம்ப முடியாத ஒருவருடன் வாழ்வதை விட, தனியாக வாழ்வதே சிறந்தது என்று முடிவு செய்ததால், கடந்த காதல் உறவுகளை முறித்துக்கொண்டேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், பிரபுதேவாவின் முன்னாள் மனைவி ரமலத் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,
பிரபுதேவா, நயன்தாராவை காதலிக்கிறார் என்பதை அப்போது என்னால் நம்பவே முடியவில்லை.
அவர் நேர்மையான கணவர், கடந்த பதினைந்து ஆண்டுகளாக எங்களை கவனித்து வருகிறார். சமீபத்தில் பிரபுதேவா எங்களுக்காக வீடு ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். இப்போது அவர் மாறிவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.
நயன்தாரா பற்றி கூறும்போது,அவர் என் கணவரை திருடிவிட்டார். மற்றவர்களின் கணவரைத் திருடும் பெண்களும் தண்டிக்கப்பட வேண்டும்.
நடிகை நயன்தாராவை நான் எங்காவது பார்த்தால் உதைப்பேன். அவர் ஒரு தவறான பெண் என்று தெரிவித்துள்ளார். இந்த கருத்து பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.