கொரோனா வைரஸின் அடுத்த மையாக ஆப்பிரிக்கா மாறக்கூடும் என்ற உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
சீனாவில் பரவிய இந்த கொரோனா வைரஸ் இப்போது ஐரோப்பிய நாடுகளை உலுக்கி வருகிறது.
இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் அங்கிருக்கும் அரசுகள் தவித்து வருகின்றன.
பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இருப்பினும் நாள் தோறும் ஏதேனும் ஒரு ஐரோப்பிய நாடுகளின் இறப்பு எண்ணிக்கை 500-க்கு மேல் தாண்டிவிடுகிறது.
தற்போது வரை அமெரிக்கா மற்றும் ஐரோப்பா தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மையமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸின் அடுத்த மையமாக ஆப்பிரிக்கா மாறக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
ஏனெனில் கடந்த வாரத்தின் இதன் விகிதங்களை கூர்ந்து கவனித்தால், நன்றாக தெரியும்.
ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் காணப்பட்டதை விட, இங்கு விகிதங்கள் மிகக் குறைவாக இருந்தாலும், ஆப்பிரிக்கா முழுவதும், தற்போது 1,000-க்கும் மேற்பட்ட இறப்புகள், 18,000-க்கும் மேற்பட்டோருக்கு இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது..
இந்த வைரஸ் இப்போது ஆப்பிரிக்க தலைநகரங்களில் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
மேலும், இந்த தொற்று நோயை சமாளிக்க ஆப்பிரிக்கா கண்டத்தில் போதுமான வெண்டிலேட்டர்கள் இல்லை.
தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, ஐவரி கோஸ்ட், கேமரூன் மற்றும் கானா ஆகிய நாடுகளில் வைரஸ் தலைநகரங்களில் இருந்து உள்நாட்டிற்குள் பரவுவதாக அந்த அமைப்பின் ஆப்பிரிக்கா இயக்குனர் மருத்துவர் Matshidiso Moeti பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு கூறினார்.
பல கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் திறன் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இல்லாததால், வைரஸுக்கு சிகிச்சையளிப்பதை விட அவர்கள் தடுப்பதில் கவனம் செலுத்துவதாக தெரிவித்தார்.
அவசர சிகிச்சை பிரிவில் மக்களின் எண்ணிக்கை வருவதை குறைக்க நாங்கள் விரும்புகிறோம். ஏனெனில், இந்த வகையான வசதிகள் பெரும்பான்மையான ஆப்பிரிக்க நாடுகளில் எந்த வகையிலும் போதுமானதாக இல்லை.
தற்போது இருக்கும் இந்த சூழ்நிலையில், வெண்டிலேட்டர்களின் பிரச்சினை நாடுகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களாக இருப்பதால், கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நோயாளிக்கு இது வாழ்க்கை தருவது மற்றும் இறப்பை கொடுப்பது போன்று இருக்கலாம் என குறிப்பிட்டார்.
ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸால் இறந்த முதல் பதிவுகளில் ஒன்று மார்ச் மாதம் ஜிம்பாப்வே பத்திரிகையாளர் சோரோரோ மக்காம்பா, இவருக்கு சிகிச்சையளிக்க வென்டிலேட்டர் இல்லை, அதன் காரணமாகவே இறந்ததாக தலைநகர் ஹராரேவில் உள்ள உள்ளூர் அதிகாரிகள் கூறியதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.