கொரோனா வைரஸை சீனா கையாள்வது குறித்த வளர்ந்து வரும் கருத்துகளுக்கு மத்தியில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் தனது கருத்தை பதிவுசெய்துள்ளார்.
கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான சீனாவின் சர்வாதிகார பதில் மேற்கத்திய ஜனநாயக நாடுகளின் பலவீனத்தை அம்பலப்படுத்தியிருக்கிறதா என்று மேக்ரானிடம் கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலாளித்த மேக்ரான், திறந்த சமூகங்களுக்கும் உண்மை ஒடுக்கப்பட்ட இடங்களுக்கும் எந்த ஒப்பீடும் இல்லை என்று கூறினார்.
இந்த வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டு, எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் இன்றைய சீனாவின் நிலையை நான் மதிக்கிறேன்.
கொரோனா நெருக்கடி நிலையை கையாள்வதில் மிகவும் சிறப்பாக இருந்தது என்று சொல்லும் அளவிற்கு அப்பாவியாக இருக்கக்கூடாது என்று மேக்ரான் கூறினார். எங்களுக்குத் தெரியாத விஷயங்கள் நடந்துள்ளது என தெளிவாக தெரிகிறது.
கொரோனா தோன்றிய வுஹான் நகரில் இறப்பு எண்ணிக்கை 50% அதிகரித்தன என சீனா திருத்தியதை அடுத்து பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானின் இந்த கருத்துக்கள் வெளிவந்துள்ளன.
மேலும், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான சுதந்திரங்களை கைவிடுவது மேற்கத்திய ஜனநாயகங்களை அச்சுறுத்தும் என்று அவர் கூறினார்.
நாங்கள் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. சுகாதார நெருக்கடி உள்ளது என்ற அடிப்படையில் உங்கள் அடிப்படை டி.என்.ஏவை நீங்கள் கைவிட முடியாது என மேக்ரான் கூறியுள்ளார்.