சூடானில் கொரோனா பரவுவதை தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக மதக் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்த கவர்னர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சூடானில் கொரோனாவால் 5 பேர் பலியாகியுள்ள நிலையில் 32 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நோய்த்தொற்று பரவுவதை தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக நாட்டில் மதக் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
சூடான் தலைநகர் காரட்டூமின் கவர்கனர் ஜெனரல் அகமது அப்துன் ஹம்மது முகமது சனிக்கிழமை நடைமுறைக்கு வரவிருக்கும் மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் பிரார்த்தனை தடை செய்வதற்கான முடிவை செயல்படுத்த மறுத்துவிட்டார்.
இதனையடுத்து மதக் கூட்டங்களுக்கு தடை விதித்ததை எதிர்த்த தலைநகர் கார்ட்டூமின் கவர்னரை பதவி நீக்கம் செய்து சூடான் பிரதமர் அப்தல்லா ஹம்டோக் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.