மஹலதுவ பகுதியை நீராட செல்லும் மாது கங்கையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் கங்கையில் மிதந்த நிலையில் விடுதி ஒன்றின் முகாமையாளர் ஒருவரால் காவல் துறையினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
41 வயதுடைய பலபிட்டி பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அஹுங்கல காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.