இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 248ஆக அதிகரித்துள்ளது.
77 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 164 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.