அமெரிக்காவில் ஊரடங்குக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு அந்நாட்டு ஜனாதிபதி டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,591 ஆக அதிகரித்ததுள்ளது.
இதனையடுத்து இதுவரை அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,000 கடந்துள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள ஊரடங்குக்கு எதிராக அமெரிக்காவின் சில பகுதிகளில் போராட்டம் நடக்கிறது.
ஆனால் கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொற்றுநோயைப் பரப்பக்கூடும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
LIBERATE MINNESOTA!
— Donald J. Trump (@realDonaldTrump) April 17, 2020
இந்நிலையில் இந்த போராட்டங்களுக்கு அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார்.
மிச்சிகன், வெர்ஜினியா மற்றும் மின்னெசோடா போன்ற அமெரிக்கா மாகாணங்களில் ஊரடங்கை தளர்த்துங்கள் என டொனால்டு டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் ஜனநாயக கட்சியினர் ஆளும் மாகாணங்களிலேயே போராட்டம் நடக்கிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.