இலங்கையில் இன்று காலை 7 மணிவரையிலான நிலவரப்படி கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 254 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று இரவு 6 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இவ்அதிகரிப்பு 254 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்ட 6 பேரும் வெலிசறை தனிமைப்படுத்தல் நிலையத்தில் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று 18 ஆம் திகதி இரவு 8 மணிவரை 248 ஆக காணப்பட்டதையடுத்து இரவு 6 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் 254 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 161 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, 103 பேர் சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளதுடன் இதுவரை 86 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
மேலும் இலங்கையில் கொரோனா தாக்கத்திற்குள்ளான 7 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.